சினிமா

சித்ரா ரூம்லையே வாழ்க்கையை முடித்த தந்தை! அனாதையாகிட்டேன் கதறி அழும் தாய்!

Published

on

சித்ரா ரூம்லையே வாழ்க்கையை முடித்த தந்தை! அனாதையாகிட்டேன் கதறி அழும் தாய்!

சின்னத்திரை நடிகை சித்ரா மறைவினை தொடர்ந்து அவரின் தந்தை காமராஜ், சித்ரா இருந்த அறையிலேயே சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தற்போது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரின் மனைவி கதறி அழும் வீடியோக்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  நடிகை சித்ராவின் தந்தை காமராஜின் மறைவு அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து  சித்ராவின் அம்மா கதறி அழுத படி ஊடகங்களிடம் பேசி உள்ளார். அவர் கூறுகையில் “காலையில் நாலு மணிக்கு நான் பார்க்கும்போது கூட அவரு உக்காந்து தான் இருந்தாரு, பின் ஆறு மணிக்கு வந்துபார்த்தேன் ரூம்ல அவரு இல்லை, சித்ரா ரூமுக்கு போய் பார்த்தேன். சித்ரா இருந்த ரூமிலேயே அவரும், அவரோட வாழ்க்கையை முடிச்சுக்கிட்டாரு. என் வீடு சுடுகாடா ஆகிப்போச்சு, என்னுடைய பொண்ணையும் சாகடித்துவிட்டான், இப்ப என்னுடைய கணவரையும் சாகடித்துவிட்டான்’ என்று கூறி அழுதார். மேலும் “இன்னும் யார் யாரை சாக அடிக்க போறானோ தெரியலையே. அவன் என்னைக்கு விடுதலையாகி வெளியில வந்தானோ அப்போதுல இருந்தே என் வீட்டுக்கார் சாப்பிடாம மனசால நொந்து போய்ட்டார். நான் எவ்வளவு தைரியம் சொல்லியும் அவரால் அதை ஏத்துக்கவே முடியல, கடைசில இப்படி ஒரு முடிவை எடுத்து என்ன இப்படி அனாதையா ஆக்கிவிட்டாரே. என் பொண்ணு சித்ரா இந்த வீட்டுக்கு ஆம்பள மாதிரி இருந்து எல்லாத்தையும் செஞ்சா, அவளும் போயிட்டா கடைசில இப்ப என் வீட்டுக்காரரும் போயிட்டாரு, இப்போ யாருமே இல்லாம கடைசில நான் அனாதையா இருக்கேன்” என்று கதறி அழுகிறார் இதனை பார்த்த அனைவருமே சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version