இலங்கை
சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பை கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு வெளியிட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான தகவல் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி, நாட்டில் தற்போது 47,244 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாகவும், எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், எனவே இந்த தகவலை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இதன் காரணமாக தற்போது சிறுநீரக நோய் கொடுப்பனவு பெறும் எவருக்கும் கொடுப்பனவு எவ்விதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.