இந்தியா
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் : எங்கெங்கு போக்குவரத்து மாற்றம்?
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் : எங்கெங்கு போக்குவரத்து மாற்றம்?
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 31) பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாடவும், விபத்துகளை தவிர்க்கவும் சென்னை ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்தநிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த அறிவிப்பை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி,
31.12.2024 அன்று இரவு 08.00 மணி முதல் 01.01.2025 அன்று 06.00 மணி வரை 6வது அவென்யூ நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு. 4வது மெயின் ரோடு சந்திப்பு, 3வது மெயின் ரோடு சந்திப்பு. 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்
எழும்பூா் பாந்தியன் மேம்பாலம், மகாலிங்கபுரம் மேம்பாலம், இந்திரா நகா் ‘யூ’ திருப்பம், ஆழ்வாா்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை பீட்டா்ஸ் சாலை மேம்பாலம், ராயப்பேட்டை ஜிஆா்எச் மேம்பாலம், ஆழ்வாா்பேட்டை மியூசிக் அகாதெமி மேம்பாலம், அண்ணா மேம்பாலம், ஜி.கே.மூப்பனாா் மேம்பாலம், வாணி மஹால் மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலம், ரங்கராஜபுரம் மேம்பாலம், வடபழனி மேம்பாலம், அடையாறு மேம்பாலம், வேளச்சேரி மேம்பாலம், சென்னை விமான நிலைய மேம்பாலம், நுங்கம்பாக்கம் முரசொலி மாறன் மேம்பாலம், திருமங்கலம் மேம்பாலம், 100 அடி சாலை மேம்பாலம், அண்ணா வளைவு மேம்பாலம், புதிய வள்ளலாா் மேம்பாலம் உள்ளிட்ட 23 மேம்பாலங்கள் மூடப்படுகின்றன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 19000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
பொன்வண்ணன் திரை வாழ்வில் பருத்திவீரன் தந்த வெளிச்சம்!
வேலைவாய்ப்பு : மீன் வள பல்கலையில் பணி!