சினிமா
ஜோடியாக நியூ இயர் கொண்டாட்டம்! இன்று வெளிநாட்டுக்கு பறந்த அஜித்-ஷாலினி!
ஜோடியாக நியூ இயர் கொண்டாட்டம்! இன்று வெளிநாட்டுக்கு பறந்த அஜித்-ஷாலினி!
தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வரும் பிரபல நடிகர் அஜித் மற்றும் ஷாலினி பிறக்க இருக்கும் புதுவருடத்தினை கொண்டாட ஜோடியாக வெளிநாடு கிளம்பியுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி இருக்கிறார். தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படங்களில் நடித்தும் முடித்துள்ளார். தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தான் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நியூஇயர் கொண்டாட்டத்துக்காக குடும்பத்துடன் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.2024 நிறைவடைந்து நாளை 2025ம் ஆண்டு பிறக்க உள்ளது. இதனை கொண்டாடுவதற்காக நடிகர் அஜித் மற்றும் ஷாலினி அவர்களது மகன், மகள் ஆகியோர் நியூஇயர் கொண்டாட்டத்திற்காக சிங்கப்பூர் செல்வதற்கு விமான நிலையத்துக்கு வரும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக ஷேர் ஆகி வருகிறது.