இந்தியா

திருப்பதி காணிக்கை பணத்தில் 100 கோடி ரூபா மோசடி!

Published

on

திருப்பதி காணிக்கை பணத்தில் 100 கோடி ரூபா மோசடி!

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தில் சுமார் நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணிக்கையாக வழங்கப்பட்ட பல நாடுகளின் நாணயங்கள் இங்கிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இங்கு மேற்பார்வையாளராக பணியாற்றிய ஒருவர், தனது உள்ளாடைக்குள் மறைத்து உண்டியலிலிருந்த பணங்களை திருடியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் இது அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. சுமார் நூறு கோடி வரை இங்கு திருட்டு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.சி ராம்கோபால் ரெட்டி உள்ளிட்ட பலரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version