சினிமா

பிரபல நடிகருடன் போஸ் கொடுத்த ஆல்யா மானசாவின் மகள்! செம க்யூட் போட்டோ

Published

on

பிரபல நடிகருடன் போஸ் கொடுத்த ஆல்யா மானசாவின் மகள்! செம க்யூட் போட்டோ

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடி. இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியலில் இணைந்து நடித்திருப்பார்கள்.விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் தனது கேரியரை ஆரம்பித்தவர் தான் ஆல்யா மானசா. அதன் பின்பு அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்த சீரியல் என்றால் அது ராஜா ராணி சீரியல் தான்.இந்த சீரியலில் நடிக்கும் போது அதில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் மீது காதல் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.சமீபத்தில் வீடு கட்டி புதிதாக குடி பெயர்ந்த ஆல்யா மானசா, அதற்குப் பிறகு புதிதாக கார் ஒன்றையும் வாங்கியிருந்தார். இந்த சந்தோஷத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.இந்த நிலையில், ஆல்யா மானசாவின் மகள் ஐலா விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் சேதுபதி தற்போது நடிகராக மட்டுமே இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version