இலங்கை

முல்லைத்தீவு விமானப்படை முகாம் தடுப்பு மையமானது

Published

on

முல்லைத்தீவு விமானப்படை முகாம் தடுப்பு மையமானது

இலங்கை விமானப்படை முல்லைத்தீவு முகாமை “தடுப்பு மையமாக” பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் திங்கட்கிழமை (30) வெளியிடப்பட்டுள்ளது.

 இந்த வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.முல்லைத்தீவு விமானப்படைத் தளம் தடுப்பு முகாமாக செவ்வாய்க்கிழமை (31) முதல் இயங்கவுள்ளது.

Advertisement

 கடற்படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட 103 மியான்மர் அகதிகள் முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமுக்கு தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 நீதிமன்ற உத்தரவுக்கமைய மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த போதிலும், மிரிஹான தடுப்பு முகாமில் போதிய தங்குமிட வசதிகள் இல்லாததால், இந்த அகதிகளை முல்லைத்தீவு விமானப்படைத் தளத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version