சினிமா

விஜே சித்ரா தற்கொலை செய்த 4 வருடத்திற்குபின் தந்தையும் தற்கொலை..

Published

on

விஜே சித்ரா தற்கொலை செய்த 4 வருடத்திற்குபின் தந்தையும் தற்கொலை..

சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமான நடிகை சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து வந்தார்.சில காரணங்கள் சீரியலில் இருந்து விலகி படங்களில் நடித்து வந்த சித்ரா, ஹோட்டல் ஒன்றில் கடந்த 2020 டிசம்பர் 9 ஆம் தேதி அறையில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் கணவர் ஹேமந்த் என்று கூறி கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் மகள் சித்ரா தற்கொலை செய்த 4 ஆண்டுகளுக்கு பின் அவரது தந்தை காமராஜ் திருவான்மியூரில் இருக்கும் இல்லத்தில், மகள் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள் பல இருக்கிறது. தற்கொலை எண்ணங்கள் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர் யாருக்கேனும் வந்தால் 104 என்ற நம்பருக்கு டயல் செய்து இலவச ஆலோசனைகளை பெறுங்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version