சினிமா

10 லட்சம் ஏமாந்துட்டேன்!! காசு விஷயத்தில் சந்தானம் சொன்ன வார்த்தை.. நடிகர் மனோகர்

Published

on

10 லட்சம் ஏமாந்துட்டேன்!! காசு விஷயத்தில் சந்தானம் சொன்ன வார்த்தை.. நடிகர் மனோகர்

சந்தானம் விஜய் டிவி லொல்லு சபா மூலம் மிகப்பிரபலம் அடைந்தவர். அதிலிருந்து சிம்புவின் மன்மதன் படத்தின் மூலம் அறிமுகமாகி பல வருடங்கள் காமெடியனாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.ஆனால், திடீரென இவர் ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு காமெடியனாக இனி நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்தார். பிறகு தன் லொல்லு சபா டீம்-யை அருகில் வைத்துக்கொண்டு ஒரு சில காமெடி படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றியும் பெற்றார்.இதில் சந்தானத்துடன் செம கலாட்டா செய்பவராக மனோகர் பல படங்களில் வருவார். ஷகீலா எடுத்த பேட்டியொன்றில் , சந்தானத்திற்கும் உங்களுக்கு நட்பு இப்போது இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.அதற்கு மனோகர், 10 லட்சம் ஏமாந்த விஷயம் தெரிந்து சந்தானம் கால் செய்து அக்கரை எடுத்தான். என்ன அண்ணா ஆச்சு 10 லட்ச ரூபாய் கொண்டுபோய் என்னவோ பண்ணிட்டீங்க, வாங்க நான் பார்க்கிறேன் என்று சந்தானம் தெரிவித்ததாக மனோகர் எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version