இலங்கை

இலங்கையில் பேருந்து கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Published

on

இலங்கையில் பேருந்து கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பேருந்து கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எரிபொருளின் விலை மாத்திரமன்றி வாகன உதிரி பாகங்கள் மற்றும் பொருட்களின் விலைகளையும் குறைக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும் உரையாற்றிய தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன,

2025 ஆம் ஆண்டு மத்தியில் பேருந்து கட்டணத்தை கண்டிப்பாக திருத்த வேண்டும். ஏன் என்றால் பேருந்தின் விலை அதிகரித்துள்ளது.

எரிபொருளின் விலை குறைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் குறிப்பாக குறைந்தது முப்பது மடங்கு குறைக்க வேண்டும்.

Advertisement

நாங்கள் இப்போது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

அதிக அளவில் குறைக்கப்பட்டால், அந்த பலனை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version