இலங்கை
நாமல் குமாரவுக்கு கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
நாமல் குமாரவுக்கு கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
சமூக செயற்பாட்டாளரான நாமல் குமாரவை 15 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமல் குமார இன்றையதினம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவு தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார இன்று (1) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.