இந்தியா

ஆண்ட பரம்பரை குறித்த பேச்சு : அமைச்சர் மூர்த்தி விளக்கம்!

Published

on

ஆண்ட பரம்பரை குறித்த பேச்சு : அமைச்சர் மூர்த்தி விளக்கம்!

நான் பேசியதை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளையில் படித்து தேர்வானவர்களுக்கான பாராட்டு விழாவில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டார்.

Advertisement

அப்போது, நாம் ஆண்ட பரம்பரை… வரலாறுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறியிருந்தார்.

அவரது பேச்சு சர்ச்சையான நிலையில் இன்று (ஜனவரி 2) மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்தார்.

அவர் கூறுகையில், “அந்த கேசட்டை முழுமையாக பார்த்துவிட்டு கேள்வி கேளுங்கள். எடிட் செய்து தவறான தகவலை பரப்புகிறார்கள். நான் ஒரு அமைச்சர். எல்லா சமூதாய மக்களுக்கும் பொதுவான ஆள்.

Advertisement

நீங்கள் பின் தங்கியிருக்கிறீர்கள்… இப்போதுதான் படித்து ஒரு 450 பேர் தேர்வு பெற்று வந்திருக்கிறீர்கள். நீங்கள் பதவிக்கு வரும்போது எல்லா சமுதாய மக்களையும் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் பேசினேன்.

யாரோ பர்பஸ்ஸா அதை மட்டும் சென்சார் செய்து போட்டிருக்கிறார்கள். ஆண்ட பரம்பரை என்று நான் சொன்னது, ராஜராஜ சோழர் காலம் முதல் மன்னர் காலத்தில் இருப்பதைதான் சொன்னேன். நான் சொன்னதை முழுமையாக கேளுங்கள்.

இந்த நிகழ்வு நடந்து இரண்டு, மூன்று மாதங்கள் ஆகிறது. இப்போது ஏன் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு யார் மீதும் கோபம் இல்லை” என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version