இலங்கை

இந்திய, சீன உறவில் இலங்கையின் போக்கு – இராஜதந்திர மட்டத்தில் அவதானம்!

Published

on

இந்திய, சீன உறவில் இலங்கையின் போக்கு – இராஜதந்திர மட்டத்தில் அவதானம்!

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர நெருக்கடிக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சிக்கியுள்ளதால் எடுக்கப்படும் சில முடிவுகளை சில மணித்தியாலங்களுக்குள்ளேயே மாற்றியமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான போது, ​​சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பிரதித் தலைவர் கின் போயோங்(Qin Boyong) இலங்கை வந்திருந்தார். அநுர, இந்தியாவில் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்த தருணத்தில் கின் இலங்கை அரசாங்கத்தின்  அமைச்சர்களைச் சந்தித்ததுடன், இந்தியாவில் அநுரவின் நடவடிக்கைகளையும் கண்காணித்துள்ளதாக தெரியவருகிறது.

Advertisement

இதேவேளை, அநுரவின் சொந்த ஊரான அநுராதபுரம் தம்புத்தேகமவில், சீன நிதியுதவியில் இடம்பெறும் திட்டத்திற்கான வைபவம் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, ஏனைய நாடுகளுடனான இலங்கை உறவுகளை தொடரும் அதேவேளை, சீனாவுடனான ஜே.வி.பி.யின் உறவு பலமாக பலமாக இருக்கும். ஜே.வி.பி வேறு எந்த நாட்டுடனும் உறவுகளைப் பேணவில்லை எனக் கூறியிருந்தார்.

அரசாங்கம் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா மற்றும் சீனாவுடன் சமமான உறவை பேணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், கட்சி ரீதியாக ஜே.வி.பி சீனாவுடன் பலமான உறவை கட்டியெழுப்ப விரும்புகிறது.

அநுர இந்தியாவில் இருக்கும் தருணத்தில் அவரது அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சர், அநுரவின் பிறந்த இடத்தில் சீன அதிகாரிகள் முன்னிலையில் இவ்வாறானதொரு அறிவிப்பை விடுத்தமை குறித்து இராஜதந்திரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர். அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவிலிருந்து திரும்பியதும் கின் போயோங்குடன் சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version