இலங்கை

இந்த உணவுகளை எல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சினை ஏற்படுமா?

Published

on

இந்த உணவுகளை எல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சினை ஏற்படுமா?

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உடலுக்கு ஆற்றல் தேவை. அந்த வகையில் நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உடலுக்கு ஆற்றல் தேவை. அந்த வகையில் நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும்.

அவ்வாறு நாம் எந்தெந்த உணவுகளை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

Advertisement

காலையில் பூரி அல்லது வடை, பக்கோடா, போண்டா, பஜ்ஜி போன்றவற்றை சாப்பிடுவது நாள் முழுவதும் மந்தமாக உணரவைக்கும். இதில் அதிக அளவு எண்ணெய் மற்றும் கொழுப்பு இருப்பதால் ஜீரணிக்க கடினமாகிறது. அத்தகைய சூழ்நிலையில், வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது அஜீரணத்தை ஏற்படுத்தும்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, எனவே, அவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வது அமிலத்தன்மையை அதிகரிக்கும். வெறும் வயிற்றில் புளிப்பு சுவை கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற பழங்கள் பழங்கள் அல்லது அவற்றின் சாறு சாப்பிடுவதும் ஆரோக்கியமற்றது. இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில், இது புண்களை ஏற்படுத்தும். இந்த பழங்களை காலை உணவுடன் அல்லது அதற்குப் பின்னர் சாப்பிடுவது நல்லது.

காலை உணவில் அதிக அளவு மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களை சேர்த்த உணவுகளை உட்கொள்வது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். செரிமான அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி அமில உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனுடன், வெறும் வயிற்றில் காரமான உணவுகளை உட்கொள்வது அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

Advertisement

பச்சைக் காய்கறிகளை அதாவது சாலட்டை வெறும் வயிற்றில் உட்கொண்டால், பக்கவிளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது பொதுவாக வயிற்று வலியை ஏற்படுத்தும், ஏனெனில் இவற்றை ஜீரணிப்பது. கடினம்

மைதாவில் தயாரிக்கப்பட்ட பிரெட், பரோட்டா போன்றவற்றில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிக மிக குறைவாகவே உள்ளது. மறுபுறம், கலோரிகள், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவை அதிகம் உள்ளது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். மேலும், இதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உங்களுக்கு பசியை ஏற்படுத்தும்.  

வாழைப்பழம் சத்துக்கள் நிறைந்த பழம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல. இதற்குக் காரணம் இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் இயற்கை சர்க்கரை, வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு மிகவும் அதிகரிக்கும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version