இலங்கை

இயந்திர கோளாறு நடுக்கடலில் பயணிகளுடன் தத்தளித்த படகு!

Published

on

இயந்திர கோளாறு நடுக்கடலில் பயணிகளுடன் தத்தளித்த படகு!

நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் படகொன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நெடுந்தீவில் இருந்து நேற்று பகல் 11:30 மணிக்கு குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபட்ட கரிகணன் பயணிகள் படகானது நடுக்கடலில் பயணித்த வேளை திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு இயங்க மறுத்தது.

Advertisement

இதன்போது குறித்த படகில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தென்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என சுமார் 60 பேருக்கும் அதிகமானோர் பயணித்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த படகானது கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் கடலில் தத்தளித்த நிலையில், இதனை அவதானித்த நெடுந்தீவு மக்கள் தமது சிறிய மீன்பிடி படகுகளை கொண்டு சென்று பயணிகளை ஆபத்திலிருந்து விரைந்து மீட்டதுடன் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் படகின் உதவியுடன் குறித்த பயணிகள் படகானது கரைக்கு கொண்டுவரப்பட்டது.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version