இந்தியா

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்!!

Published

on

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்!!

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்ததாக புதன்கிழமை (ஜன. 01) இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓராண்டுக்கு முன் இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

அவர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்திய-இலங்கை அரசாங்க அதிகாரிளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 20 மீனவர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதையடுத்து அவர்களுக்கு தற்காலிக குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டு, விமானம் மூலமாக கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு மீனவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

சென்னை விமான நிலையத்தை மீனவர்கள் சென்றடைந்ததும், அவர்களது குடியுரிமை சரிபார்ப்பு, இந்திய சுங்கச் சோதனை மற்றும் பிற சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தனி வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்தனர்.

முன்னதாக கடந்த டிசம்பர் 24 அன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை கடற்படையின் பிடியில் உள்ள 20 இந்திய மீனவர்களையும் அவர்களது இயந்திரப் படகுகளுடன் உடனடியாக விடுவிக்க இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

Advertisement

அக்கடிதத்தில், அடிக்கடி மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் தாக்குதல்கள், பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிப்பதை மட்டுமே நம்பி வாழும் ‘எங்கள்’ மீனவர்களின் வாழ்க்கையை மிகவும் நிச்சயமற்றதாகவும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்படத்கத்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version