இலங்கை

இளம் கர்ப்பிணிப் பெண்ணை கொன்ற கணவன்… பிள்ளையின் செயலால் சிக்கிய தந்தை!

Published

on

இளம் கர்ப்பிணிப் பெண்ணை கொன்ற கணவன்… பிள்ளையின் செயலால் சிக்கிய தந்தை!

அனுராதபுரத்தில் உள்ள பகுதியொன்றில் இளம் கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அனுராதபுரம், பதவியா பகுதியை சேர்ந்த 27 வயதான ருவந்தி மங்கலிகா என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

8 மாத கர்ப்பிணித் தாய் நேற்று முன்தினம் (31-12-2024) சந்தேக நபரான கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிள்ளையின் கற்றல் நடவடிக்கையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   

Advertisement

தாயை, தந்தை சண்டை அவதானித்த 2ம் தரத்தில் கல்வி பயிலும் பிள்ளை அயலவர்களின் உதவியை நாடியுள்ளது.

இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட அயல்வீட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  

சம்பவம் தொடர்பில் பொலிஸார் 33 வயதுடைய சந்தேக நபரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

Advertisement

சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version