இலங்கை
கிளிநொச்சி விபத்து படுகாயமடைந்த பெண் நேற்று உயிரிழப்பு!
கிளிநொச்சி விபத்து படுகாயமடைந்த பெண் நேற்று உயிரிழப்பு!
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக, கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற டிப்பர் விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் கஜன் அபிவர்னி (வயது 2) என்ற பாலகி அன்றைய தினமே உயிரிழந்தார். அவருடைய பெற்றோரான வரதீஸ்வரன் கஜன் (வயது 40), கஜன் யாழினி (வயது 34) ஆகியோரும், சகோதரியான கஜன் இசைநிலா (வயது 6) என்ற சிறுமியும் காயமடைந்திருந்தனர்.
விபத்தில் உயிரிழந்த இரண்டு வயதுச் சிறுமியின் தாயாரான கஜன் யாழினி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். (ப)