இலங்கை

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 3 ஜீப்கள் பறிமுதல் செய்யப்பட்டது!

Published

on

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 3 ஜீப்கள் பறிமுதல் செய்யப்பட்டது!

மேல்மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படும் நான்கரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்களை  மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் உள்ள முன்னாள் அமைச்சரின் வீட்டில் இருந்து இராணுவ ஜீப் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு முதலில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

Advertisement

இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மேலும் இரண்டு சொகுசு ஜீப் வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைப்பற்றப்பட்ட ஜீப் வண்டிகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அரச நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இலக்கங்களின் கீழ் அசெம்பிள் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version