சினிமா

சூடேறி கொதிக்கும் வீரதீர சூரன் விக்ரம்.. இரவோடு இரவாக உதயநிதிக்கு பறந்த தூது

Published

on

சூடேறி கொதிக்கும் வீரதீர சூரன் விக்ரம்.. இரவோடு இரவாக உதயநிதிக்கு பறந்த தூது

தங்களான் படத்திற்கு பின்னர் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் படம் வீரதீர சூரன். கடந்த சில வருடங்களாக எந்த படமும் சரிவர அமையாததால் விக்ரம் இந்த படத்தை பெரிதும் நம்பிக் கொண்டு இருக்கிறார். அதற்கேற்றார் போல் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளிவந்து பட்டையை கிளப்பியது.

இந்த படம் முழுவதுமாக முடிந்து விட்டது. 2025 பொங்கல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது ஜனவரி 24ஆம் தேதி என்று அறிவிப்பு வந்தது. அதற்கு காரணம் பொங்கல் வெளியிடாக விடா முயற்சி வருவதால் இவர்கள் ஒரு வாரம் தாமதமாக வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

Advertisement

எல்லாம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கும் போது திடீரென விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா, இந்த படம் பொங்கலுக்கு வெளியாகாது, இதன் ரிலீஸ் தள்ளிப் போகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இந்த படத்தை நம்பியிருந்த அனைவரும் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

விடாமுயற்சி வருவதால் தள்ளிப்போன வீர தீர சூரன் இப்பொழுது முழித்துக் கொண்டது. இந்த இரண்டு படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வாங்கி விநியோகம் செய்கிறது. அதனால் தியேட்டர்கள் கிடைக்காத சங்கடத்தால் தான் விக்ரம் படம் தள்ளிப்போனது.

இப்பொழுது வீரதீர சூரன் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாமா என திட்டம் போட்டு வருகிறார்கள். ஏற்கனவே பொங்கல் ரேசில் பாலா மற்றும் அருண் விஜய் கூட்டணியில் வெளிவரும் வணங்கான் துண்டை போட்டு வைத்துள்ளது. இதனால் ரெட் ஜெயன்ட் உதயநிதிக்கு இரவோடு இரவாக வீர தீர சூரனின் ரிலீஸ் பற்றிய விஷயங்கள் தூது சென்றிருக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version