இலங்கை

தேசிய புலனாய்வுப் பிரிவிற்கு புதிய பிரதானி!

Published

on

தேசிய புலனாய்வுப் பிரிவிற்கு புதிய பிரதானி!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

நேற்றைய தினம்  மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு பெற்றவர்) பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவிடமிருந்து (ஓய்வு பெற்றவர்) நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் அவரது அலுவலகத்தில்  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

மேலும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க ஓய்வுபெற்றதையடுத்து, வெற்றிடமான தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி பதவிக்கு மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version