சினிமா

பிரம்மாண்ட பட்ஜெட்டில் அடுத்த ஹீரோவை 4 வருடத்திற்கு லாக் செய்த ராஜமவுலி

Published

on

பிரம்மாண்ட பட்ஜெட்டில் அடுத்த ஹீரோவை 4 வருடத்திற்கு லாக் செய்த ராஜமவுலி

RRR படத்திற்கு பின் ராஜமௌலியின் அடுத்த படைப்பிற்காக திரையுலகமே காத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது இதற்கான அனல் பறக்கும் அப்டேட் வெளிவந்துள்ளது.

ராஜமௌலி நான்கு வருடத்திற்கு மகேஷ்பாபுவை லாக் செய்து வைத்துள்ளாராம். அதாவது அடுத்த எடுக்க உள்ள படம் Jungle action adventure கதைக்களத்தில் உருவாக உள்ளதாம்.

Advertisement

இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 2025 ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2027 முதல் பாகமும், 2029ல் இரண்டாம் பாகம் வெளியிட உள்ளனர்.

இதனால் மகேஷ்பாபுவை கிட்டத்தட்ட நாலு முதல் ஐந்து வருடத்திற்கு ராஜமௌலி குத்தகைக்கு எடுத்து விட்டாராம்.

இந்த ஒரு பிரம்மாண்ட காம்போவில் யார் யார் நடிக்கப் போகிறார் என்பதற்கான வேலைகள் அதிரடியாக நடந்து கொண்டு வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அதிக பட்ஜெட்டில், முக்கியமா மகேஷ்பாபுவுக்கு தென்னிந்தியாவிலேயே யாரும் எதிர்பார்க்காத சம்பளத்தை கொடுத்து உருவாக உள்ள இந்த படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை முறியடிக்கும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version