இந்தியா

புதுச்சேரி மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி: டூவீலர், கார் பதிவு கட்டணம் உயர்வு

Published

on

புதுச்சேரி மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி: டூவீலர், கார் பதிவு கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் பஸ் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் மதுபான உரிமக்கட்டணம், டூவீலர், கார் பதிவு கட்டணமும் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக 3.54 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை தரப்பட்டது. இதனால் ரூ.177 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.மேலும் மத்திய குழுவினர் புதுச்சேரி வந்து ஆய்வு செய்து சென்றனர். மத்திய அரசிடம் ரூ.614 கோடி கோரி கடிதமும் முதல்வர் ரங்கசாமி தந்துள்ளார். தமிழகத்துக்கு உதவி கிடைத்துள்ள சூழலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணியிலுள்ள புதுச்சேரிக்கு இதுவரை உதவி கிடைக்கவில்லை என்ற பேச்சு மக்களிடம் எழுந்துள்ளது.அதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு வரி, கட்டண உயர்வை கையில் எடுத்துள்ளது. கடும் நிதி சுமையை சமாளிக்க அடுத்தடுத்து கட்டணங்களை புதுச்சேரியில் உயர்த்த வேண்டியுள்ளது. புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்குள் அடுத்த அறிவிப்பாக புத்தாண்டு முதல் பெட்ரோல் டீசல் கட்டணம் லிட்டருக்கு தலா ரூ.2 உயர்ந்தது.இதனை அடுத்து  மதுபான உரிம கட்டணம் மற்றும் டூவீலர்கள், கார்கள், பஸ்கள், வாகனங்கள் பதிவு கட்டணத்தையும் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version