சினிமா

பொங்கல் ரேஸுக்கு தயாரான 10 படங்கள்.. கடும் அப்செட்டில் அஜித் ரசிகர்கள்

Published

on

பொங்கல் ரேஸுக்கு தயாரான 10 படங்கள்.. கடும் அப்செட்டில் அஜித் ரசிகர்கள்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் ரசிகர்களை அப்செட்டுக்கு உள்ளாக்கியுள்ளது.மிகப்பெரிய நடிகரான அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்ற செய்தியை அறிந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சற்று பெருமூச்சு விட்டவர்களாய் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.இந்த நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சுமார் பத்து படங்கள் ரிலீஸ் ஆக தயாராக உள்ளன. தற்போது குறித்த படங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.அதன்படி அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படம்,  ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தின் தமிழ் ரீமேக் ஆகியவை ரிலீசாக உள்ளது.மேலும் விஜயகாந்தின் மகனான ஷண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன், சிபிராஜ் நடிக்கும் 10 ஹவர்ஸ், மிர்ச்சி சிவாவின்  மோ, கலையரசன் நடித்துள்ள மெட்ராஸ் காரன் ஆகிய படங்களும், கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடித்த தருணம் ஆகிய படங்களுடன் இறுதியாக 2k லவ் ஸ்டோரி என்ற படமும் பொங்கல் ரேஸ்க்கு தயாராக உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version