இந்தியா

போலீஸ் அனுமதி மறுப்பு : தடையை மீறி சவுமியா அன்புமணி போராட்டம்?

Published

on

போலீஸ் அனுமதி மறுப்பு : தடையை மீறி சவுமியா அன்புமணி போராட்டம்?

பாமக மகளிர் அணி போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்,

Advertisement

மாணவிக்கு நீதி கேட்டு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக, குற்றம்சாட்டப்பட்ட நபர் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட போது, சார் என பேசியதாக கூறப்படுகிறது. இதனால் யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் யாரையோ காப்பாற்ற முயல்கிறார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு, பாமக மகளிர் அணி சார்பில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (ஜனவரி 2) போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

Advertisement

எனினும் அறிவித்தபடி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக வட்டாரங்கள் கூறுகின்றன.

அதுபோன்று, பாமக சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் “அடுத்தது நானா? Am I Next?” என்கிற கேள்வியுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு, போலீஸ் தடையை மீறி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version