இலங்கை

மீண்டும் பிற்போடப்பட்ட கப்பல் சேவை!

Published

on

மீண்டும் பிற்போடப்பட்ட கப்பல் சேவை!

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான படகு சேவை இன்றையதினம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவை இன்று இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெறவில்லை என கப்பல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவையானது இதுவரை காலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்றையதினம் பயணிகள் கப்பல் சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சீரற்ற காலநிலையினால் இன்றையதினம் கப்பல் சேவை இடம்பெறவில்லை எனவும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியே குறித்த கப்பல் சேவை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version