இலங்கை

முன்னாள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்ப தயாராகும் எதிர்க்கட்சி!

Published

on

முன்னாள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்ப தயாராகும் எதிர்க்கட்சி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள போதிலும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அவர் பெற்றுக்கொண்ட சான்றிதழை இன்னமும் சமர்ப்பிக்காத காரணத்தால் இதுகுறித்து எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டமையால் அவர் தமது பதவியை துறந்ததுடன், புதிய சபாநாயகராக ஜெகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில் அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட பொறியியல் பட்டம் தொடர்பிலான சான்றிதழை சமர்ப்பிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும் இன்னமும் அதனை சமர்ப்பிக்காமையால் அதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்ப உள்ளதாகவும் அறிய முடிகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version