சினிமா

விஜய் ஆண்டனி 3.0 இசைநிகழ்ச்சி! வெளியானது புதிய திகதி!

Published

on

விஜய் ஆண்டனி 3.0 இசைநிகழ்ச்சி! வெளியானது புதிய திகதி!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தொடர்ந்து பல இசைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் நடக்கவிருந்த 3.0 விஜய் ஆண்டனி மாபெரும் இசை நிகழ்ச்சி சில காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் அடுத்த இசைநிகழ்ச்சி திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குனராகவும், நடிகராகவும் விஜய் ஆண்டனி வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் கடந்த டிசம்பர் 28-ந் தேதி நடைபெற இருந்தது.ஆனால் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவித்து விஜய் ஆண்டனி இன்ஸராகிராமில் பதிவிட்டிருந்தார். மேலும் புதிய திகதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இதன் புதிய திகதி குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில்  இந்த நிகழ்ச்சி வருகிற 18-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்த நிலையில் விரைவாக இந்த போஸ்டரை ஷேர் செய்து புக்கிங்  செய்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version