நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 02/01/2025 | Edited on 02/01/2025

விஜய்யின் 69வது படத்தை தயாரித்து வருகிறது கே.வி.என். நிறுவனம். இதை தவிர்த்து கன்னட மொழியில் யாஷ் நடிக்கும் டாக்சிக், இந்தியில் பிரியதர்ஷன் இயக்கும் திரில்லர் படம் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக மலையாளத்தில் ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் ஹிட்டடித்த மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரத்துடன் கே.வி.என். நிறுவனம் கைகோர்த்துள்ளது. இப்படத்திற்கு ஆவேஷம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதுகிறார். மஞ்சும்மல் பாய்ஸ் பட இசையமைப்பாளராக சுஷின் ஷியாமே இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

இப்படம் குறித்து இயக்குநர் சிதம்பரம் பேசும் போது,  “கதைகளை சொல்லும் என் ஆசையை பகிர்ந்து கொள்ளும் குழுவுடன் பணியாற்ற இருப்பது மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த கூட்டணியை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன், இந்த குறிக்கோளை நிஜமாக்கும் தருணத்திற்காக காத்திருக்க முடியவில்லை” என்றுள்ளார்.