இலங்கை

e-Traffic செயலி அறிமுகம் : போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பில் இலகுவாக புகார் அளிக்கலாம்!

Published

on

e-Traffic செயலி அறிமுகம் : போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பில் இலகுவாக புகார் அளிக்கலாம்!

போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு உடனடி முறைப்பாடுகளை வழங்குவதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரியவினால் e-Traffic கையடக்க தொலைபேசி செயலி நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக E-சேவைகளை அணுகுவதன் மூலம் e-Traffic கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை நீங்கள் இலகுவாக உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

இதன் மூலம் மக்களின் முறைப்பாடுகள் உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய 607 பொலிஸ் நிலையங்களில் போக்குவரத்து அதிகாரிகள் கடமையாற்றுவதுடன், இந்த e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் தினசரி வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version