இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் பாரிய பிரச்சினைகள்!

Published

on

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் பாரிய பிரச்சினைகள்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

Advertisement

அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, உப்பு, தேங்காயெண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியின் போது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த விசேட பண்டவரி கடந்த 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 

எனினும் குறித்த வரிகளைத் தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும்  

Advertisement

எமக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில், ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் 513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றதாகவும் 

100 ரூபாய் வரி அடங்கலாக 616 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில் சதொச ஊடாக 845 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்பதுடன் 

Advertisement

516 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய காய்ந்த மிளகாயை நீங்கள் எவ்வளவு தொகைக்குக் கொள்வனவு செய்கிறீர்கள் என்பது தொடர்பில் பொது மக்கள் சிந்திக்க வேண்டும். 

513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நெத்தலி 100 ரூபாய் வரி அடங்கலாக 621 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும். 

ஆனால், நெத்தலி கிலோ கிராம் ஒன்று 960 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

146 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 211 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

பருப்பு 227 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கான வரி 25 சதம். 

ஆனால் என்ன நடக்கிறது. இவை அனைத்துக்குமான விலைப்பட்டியலில் தவறு காணப்படுகிறது. 

Advertisement

ஆகவே, அரசாங்கத்தினால் இந்த நிலைமையினை நிவர்த்தி செய்ய முடியாவிடின், நாட்டை ஆட்சி செய்ய முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version