சினிமா

இந்த வயசுல பொண்ணு கேட்குதான்னு பேசுனாங்க!! பாலு மகேந்திரா வளர்ப்பு மகளின் மறுப்பக்கம்..

Published

on

இந்த வயசுல பொண்ணு கேட்குதான்னு பேசுனாங்க!! பாலு மகேந்திரா வளர்ப்பு மகளின் மறுப்பக்கம்..

தமிழ் சினிமாவில் 80-களில் லிஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. 1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார். இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார்.அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார். 18 ஆண்டுகள் தனியாக இருந்த பாலு மகேந்திரா 1998ல் மவுனிக்காவை திருமணம் செய்து கொண்டார். 2014ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.பாலு மகேந்திரா தத்தெடுத்த வளர்த்த மகள் சக்தி மகேந்திரா சினிமாவில் அறிமுகமாகி தற்போது வாய்ப்பு தேடி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சக்தி மகேந்திரா எமோஷ்னலாக பேசியிருக்கிறார். என் அம்மாவிடம், எனக்கு பெண் குழந்தை கிடையாது, பொண்ணு வளர்க்கணும் என்று ஆசை, இவங்கள பொண்ணாக பார்த்துக் கொள்ளட்டுமா என்று கேட்டார்.2010 இறுதி முதல் அவர் இறக்கும் வரை நான் அவர்களுடன் இருந்தேன். அப்போது எனக்கு 11 வயது தான் இருக்கும், அப்போது எனக்கு எதுவும் தெரியாது. என் அப்பா இறந்து சில மாதத்தில் அவர் என்மீது பாசமாக இருந்தது எமோஷ்னலாக இருந்தது அதனால் அவரை ஏற்றுக்கொண்டேன்.என்னை அவர் தாங்கி தாங்கி பார்த்துக்கொண்டார் என்றும் நான் இப்படி இருக்கேன் என்றால் அதற்கு எல்லாமே அவர் சொல்லிக் கொடுத்ததுனால் தான். நான் இத்தனை வருடம் மறைக்கவும் இப்போது நான் தான் மகள் என்று சொல்ல எந்த காரணமும் இல்லை.இந்த வயசுல ஒரு பொண்ணு கேட்குதான்னு எல்லாமே தப்பாதான் பேசுனாங்க, எனக்கும் அது தெரியும், அவருக்கும் தெரியும். எங்களது ரிலேஷன்ஷிப்பை யாருக்கும் புரியவைக்கணும் என்று அவசியம் இல்லை. என் பெயர் நல்லதாக இருந்தால் வெளியில் சொல், தப்பாக இருந்தால் சொல்லாதே என்று அவரே என்னிடம் சொன்னதாக சக்தி மகேந்திரா கூறியிருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version