இந்தியா

கிச்சன் கீர்த்தனா: ராகி மோர் களி

Published

on

கிச்சன் கீர்த்தனா: ராகி மோர் களி

வழக்கமாக அரிசியில்தான் நாம் மோர்க்களி செய்து சுவைத்திருப்போம். கேழ்வரகிலும் மோர்க்களி செய்து அசத்தலாம். இந்த ராகி மோர்க்களி, பசி உணர்வைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.

ராகி மாவு (கேழ்வரகு மாவு) – ஒரு கப்
புளித்த மோர் – ஒரு கப்
மோர் மிளகாய் – 3 (துண்டுகளாக்கவும்)
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

Advertisement

ராகி மாவுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைக்கவும். அடிகனமான கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் மோர் மிளகாய் சேர்த்து வறுக்கவும். பிறகு மாவுக் கரைசலைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறி வேகவிட்டு இறக்கவும் (ஈரமான விரல்களால் தொட்டுப்பார்க்கும்போது, ஒட்டாமல் இருந்தால், வெந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்). மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version