இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பத்திற்கு தொடரும் சோதனை!

Published

on

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பத்திற்கு தொடரும் சோதனை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினர் மீதான தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கெஹெலியவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை செயற்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (3) உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களின் 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வங்கி நிலையான வைப்புக்கள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் நீதிம்னறத்தினால் வித்திக்கப்பட்ட தடை உத்தரவு இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதனை மேலும் நீடிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம், மேற்படி உத்தரவை ஏப்ரல் 2ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version