இலங்கை

கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம்-நீதவான் அறிவுரை!

Published

on

கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம்-நீதவான் அறிவுரை!

தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்களை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம் என்ற கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேன சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவர்களை ஒன்றாக சங்கிலியால் பிணைக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

தடுப்புக்காவலில் உள்ள நபர்களும் மனிதர்கள் என்றும், கண்ணியத்துடன் நடத்தப்பட தகுதியானவர்கள் என்றும் அதிகாரிகளுக்கு அவர் நினைவூட்டியுள்ளார்.

சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட சந்தேகநபர்கள் குழு ஒன்றை அதிகாரிகள், நேற்று, நீதிமன்ற அறைக்குள் கொண்டு வந்ததைக் கவனித்த பின்னர், மேலதிக நீதிவான் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களை விலங்குகளைப் போன்று சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் மேலதிக நீதிவான் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும்  தடுப்புக்காவலில் உள்ள கைதிகளை முறையான நடைமுறைகளின்படி நீதிமன்ற அறையில் வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version