இந்தியா
டாப் 10 நியூஸ் : பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் முதல் தொடங்கும் சிட்னி டெஸ்ட் வரை!
டாப் 10 நியூஸ் : பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் முதல் தொடங்கும் சிட்னி டெஸ்ட் வரை!
பொங்கல் தொகுப்பு விநியோகத்துக்கான டோக்கன்கள் இன்று (ஜனவரி 3) முதல் வீடுவீடாக வழங்கப்பட உள்ளது. பொருட்களின் தரத்தை உறுதிசெய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து இன்று மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதி கேட்பு பேரணி மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் புதிய 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட பல்வேறு நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டங்களைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் தொழில்நுட்ப விழாவான, சென்னை ஐஐடியின் சாஸ்த்ரா வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா 2025 இன்று தொடங்கி 7ந்தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
வானத்தில் இருந்து இன்றும் நாளையும் நூற்றுக்கணக்கில் விண்கற்கள் மழைய பொழிய உள்ளது. இதை தமிழக மக்கள் இரவில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
நடராஜன் சுப்பிரமணியம் நடிப்பில் உருவாகியுள்ள Seesaw, நடிகர் சத்யராஜ், சேரன் நடிப்பில் உருவாகியுள்ள Bioscope, ரக்ஷிதா மகாலட்சுமி நடித்துள்ள xtreme உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் இன்று ரிலீசாகிறது.
கோவில்பட்டியில் அனைத்து பேருந்துகளும் இன்று முதல், கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் 21 நாள் முகாம் இன்று தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் அறிவிப்பு.
பார்டர்-காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் கடைசி மற்றும் 5வது ஆட்டம், சிட்னியில் இன்று காலை தொடங்கியது. ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனையாகி வருகிறது.