இலங்கை

திங்கள் முதல் இந்திய திரைப்பட விழா!

Published

on

திங்கள் முதல் இந்திய திரைப்பட விழா!

இந்தியத் திரைப்பட விழாவானது, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள நகரங்களில் நடத்தப்படும், என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

6ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6:30 மணிக்கு கொழும்பில் உள்ள பிவிஆர் சினிமாவில் பாலிவுட் ஹிட் ’83’ திரையிடலுடன் விழா தொடங்கவுள்ளது.

Advertisement

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கண்டி, அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள துணை உயர்ஸ்தானிகராலயங்கள் கொழும்பு சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையத்துடன் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

இவ்விழாவில் நாடகம், காதல், சண்டைக்காட்சி மற்றும் வரலாற்றுக் காவியங்கள் அடங்கிய செழுமையான திரைப்படங்களின் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

கொழும்பிற்கு மேலதிகமாக, பதுளை, யாழ்ப்பாணம், காலி, குருணாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களிலும் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version