இந்தியா

நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரிப்பு-ஆய்வில் அதிர்ச்சி!

Published

on

நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரிப்பு-ஆய்வில் அதிர்ச்சி!

நாடு முழுவதும் நிலத்தடி நீரின் தரத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆண்டுதோறும் ஆய்வு செய்து வருகிறது.

அந்தவகையில் கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதில் நாடு முழுவதும் 440 மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான நைட்ரேட் நிலத்தடி நீரில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

Advertisement

அதன்படி, நாடு முழுவதும் 15,259 கண்காணிப்பு பகுதிகளை தேர்வு செய்து நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 25 சதவீத கிணறுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

குறிப்பாக பருவமழைக்கு முன்னும் பின்னும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 சதவீத மாதிரிகளில் உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய தர நிர்ணய அமைப்பு ஆகியவை அனுமதித்த அளவை விட அதிகமாக நைட்ரேட் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் 9.04 சதவீத மாதிரிகளில் புளோரைடு அளவும், 3.55 சதவீத மாதிரிகளில் ஆர்சனிக் அளவும் மிகவும் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

அந்தவகையில் தமிழ்நாட்டின் விழுப்புரம், ராஜஸ்தானின் ஜோத்பூர், பார்மர், மகாராஷ்டிரத்தின் வார்தா, புல்தானா, அம்ராவதி, நாண்டட், பீட், ஜல்கான், யவட்மால், தெலுங்கானாவின் ரங்காரெட்டி, அடிலாபாத், சித்திபேட், ஆந்திராவின் பல்நாடு, பஞ்சாப்பின் பதிண்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகபட்ச நைட்ரேட் அளவுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version