இந்தியா

பியூட்டி டிப்ஸ்: வெள்ளி கொலுசு… பராமரிப்பு அவசியம்!

Published

on

பியூட்டி டிப்ஸ்: வெள்ளி கொலுசு… பராமரிப்பு அவசியம்!

இன்றைக்கு பெண்கள் பலர் விரும்பி அணியும் வெள்ளி கொலுசை சோப்பு தண்ணீரில் ஊற வைக்கிறார்கள்.

பாத்திரம் தேய்க்கும் பொடியால் துலக்குகிறார்கள். மாறாக, நெற்றிக்கு இடும் தரமான விபூதியை கொலுசின் மீது தூவி, வெள்ளை நிற சாஃப்ட் காட்டன் துணியால் துடைத்து எடுக்கலாம். விபூதி  கொலுசு வேலைப்பாடுகளுக்குள் சென்று அடைத்துக் கொண்டால், காது குடையும் பட்ஸால் சுத்தம் செய்யலாம்.

Advertisement

வேலைப்பாடுகள் மிகவும் சிறியதாக இருந்தால், மெல்லிய தென்னங்குச்சி அல்லது துடைப்பம் குச்சியின் நுனியில் பஞ்சை சுற்றி, டிசைன்களுக்குள் விட்டு சுத்தம் செய்யலாம். சில்வர் பாலிஷ் துணி அல்லது சில்வர் கிளீனர் மூலம் அவற்றை சுத்தம் செய்யலாம்.

பயன்பாட்டில் இல்லாதபோது பருத்தி துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் மேற்பரப்பை துடைத்து, காற்றுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க சீல் செய்யப்பட்ட பை அல்லது பெட்டியில் வைக்கவும்.

வெள்ளி நகைகளை அணியும்போது மோதலில் சிதைவு அல்லது சிராய்ப்பு ஏற்படாமல் இருக்க அதே இடத்தில் மற்ற விலையுயர்ந்த உலோக நகைகளை அணிய வேண்டாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version