இந்தியா

மதுரையில் தடையை மீறி பாஜக பேரணி… குஷ்பூ கைது!

Published

on

மதுரையில் தடையை மீறி பாஜக பேரணி… குஷ்பூ கைது!

மதுரையில் தடையை மீறி இன்று (ஜனவரி 3) பேரணி நடத்த முயன்ற குஷ்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கும் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையிலிருந்து சென்னை வரை பேரணி நடத்தப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

Advertisement

மகளிர் அணியின் சார்பில் நீதி கேட்டு பேரணியானது திண்டுக்கல் திருச்சி விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சென்னையைச் சென்றடைய உள்ளதாகவும், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த நீதி கேட்டு நடைபெறும் பேரணியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேரணிக்கு அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மதுரை மாநகர பா.ஜ.கவினர் மனு அளித்திருந்த நிலையில், மதுரை மாநகர காவல் துறை நேற்று அனுமதி மறுத்தது.

Advertisement

எனினும் பா.ஜ.க திட்டமிட்டபடி தடையை மீறி பேரணி நடைபெற உள்ளதாக பா.ஜ.க மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தெரிவித்திருந்தார்.

அதன்படி மதுரை சிம்மக்கல்லில் பாஜக மகளிரணியின் பேரணியை தொடங்கி வைத்து அக்கட்சியின் பிரமுகரான குஷ்பூ பேசினார்.

அவர், “விளம்பரம் தேவைப்படுவது திமுகவுக்கு தான், பாஜகவுக்கு இல்லை. தேர்தல் வாக்குறுதியாக பல விஷயங்கள் சொன்னீர்கள். நேற்று கூட பெண்களுக்காக ஏதோ ஒரு புதிய திட்டம் கொண்டு வந்துருக்கீங்க.. பெண்களை காப்பாற்றுவதற்கு வக்கில்லை. ஆனால் தீட்டம் கொண்டு வருகிறீர்களா? முதலில் பெண்களை காப்பாற்றுங்கள்” என்று பேசினார்.

Advertisement

தொடர்ந்து தடையை மீறி பாஜகவினர் பேரணியில் ஈடுபட முயன்ற நிலையில், போலீசார் குஷ்பு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version