இலங்கை

மர்மமான ஆளில்லா விமானம் ; இறுதி அறிக்கை வெளியானது!

Published

on

மர்மமான ஆளில்லா விமானம் ; இறுதி அறிக்கை வெளியானது!

திருகோணமலையை அண்மித்த கடலில் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா விமானம், இலங்கைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் இறுதி அறிக்கை விமானப்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆளில்லா விமானம் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement

இது பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி திருகோணமலைக்கு அருகில் உள்ள கடலில் இந்த ஆளில்லா விமானத்தை மீனவர்கள் குழு கண்டுபிடித்தது.

ஏறக்குறைய இரண்டு வாரங்களாக இந்த ஆளில்லா விமானம் கடலில் இருந்ததாகவும், அதனை மீண்டும் தொடர்புடைய நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version