சினிமா
12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகும் விஷால் படம்!
12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகும் விஷால் படம்!
நடிகர் விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி, நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், சோனு சூட், மொட்டை ராஜேந்திரன், கலாபவன்மணி, மணிவண்ணன், சிட்டிபாபு ஆகியோர் நடித்துள்ள ‘மதகஜராஜா’ திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இதில், கலாபவன் மணி, சிட்டி பாபு, மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயற்கை எய்தி விட்டனர்.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்யூட்க்கு இருந்த பைனான்ஸ் பிரச்சினை, விஷாலுக்கு இருந்த பிரச்சினைகள் காரணமாக படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
2013ஆம் ஆண்டில் படபிடிப்பு நிறைவடைந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மதகஜராஜா திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என்று நடிகர் சந்தானம் அறிவித்துள்ளார்.
முன்னதாக பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் தள்ளிபோயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.