இந்தியா

குறைந்த செலவில் அதி நவீன சொகுசு படகு: தயாரிக்கும் பணி புதுச்சேரியில் ஜரூர்

Published

on

குறைந்த செலவில் அதி நவீன சொகுசு படகு: தயாரிக்கும் பணி புதுச்சேரியில் ஜரூர்

புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் சொகுசு படகுகள் தயார் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதுபுதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் கடந்த ஆண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட கன்டெயினர்கள் டெலிவரி செய்யும் பணி நடந்து வந்தது. திடீரென இந்த சேவை நின்று போனதால், இதற்கு பயன்படுத்தப்பட்ட ஹோப்செவன் மினி கப்பல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், துறைமுக வளாகத்தில் இயங்கும் பின்.என்.டி. மரைன் கிராப்ட் மற்றும் கோகுலேஷ் மரைன் கம்பெனி என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் சொகுசு படகுகளை தயார் செய்து அந்தமான் உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.இதில், பின். என்.டி. நிறு வனம் “செமி சப்மெரின் பாட்டம் கிளாஸ்’ உள்பட பல்வேறு சொகுசு படகு களை தயாரிக்கிறது. கோகுலேஷ் நிறுவனம் (கேம் பிஷ்ஷிங் போட்) கடலில் துதூண்டில் போட்டு மீன் பிடித்து மகிழும் சொகுசு சுற்றுலா விசைப்படகளை தயாரிக்கிறது.கோகுலேஷ் நிறுவனம் ரூ.50 லட்சம் மதிப்பில் தயாரித்துள்ளது, இயக் குபவர் உள்பட 14 பேர் பயணிக்கும் 9.6 மீட்டர் நீளம், 2.4மீட்டர் அகலம் கொண்ட ‘கேம் பிஷ்ஷிங் போட்’டை அந்தமானில் உள்ள சுற்றுலா நிறுவனத்திற்கு தயாரித்துள்ளது.இதுபோன்று குறைந்த செலவில் அதி நவீன வசதிகள் கொண்ட சொகுசு படகுகளை தயார் செய்யும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் துறைமுக வசதி புதுச்சேரியில் உடனடியாக கிடைப்பதால் அந்தமான், மாலத்தீவு பகுதிகளில் இருந்து நிறுவனங்கள் புதுச்சேரியில் படகுகள் செய்ய ஆர்வம் காட்டுகின்றன .செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version