இந்தியா

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகிறார் பெ.சண்முகம்

Published

on

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகிறார் பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் (ஜனவரி 5) நிறைவடைகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தற்போது கே.பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார். இந்தநிலையில், சிபிஎம் மாநாட்டில் மத்திய கமிட்டி உறுப்பினர் பெ.சண்முகத்தை மாநில செயலாளராக தேர்வு செய்யவிருப்பதாக மார்க்சிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவரமைப்பான எஸ்.எஃப்.ஐ மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ-யில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் பெ.சண்முகம்.

சிபிஎம் மாநில செயலாளராக நல்லசிவம் இருந்தபோது தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராம பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக நீண்ட நெடிய போராட்டத்தை மேற்கொண்டார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக பணியாற்றியுள்ளார்.

அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான பல போராட்டங்களில் முன் நின்று பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். கடந்த 2022 ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சிபிஎம் மாநாட்டில் முதல்முறையாக மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

கடந்த ஆண்டு தமிழக அரசின் அம்பேத்கர் விருதை முதல்வர் ஸ்டாலின் சண்முகத்திற்கு வழங்கினார். இந்தநிலையில், கட்சியின் மாநில செயலாளராக பெ.சண்முகத்தை தேர்ந்தெடுக்க கட்சி நிர்வாகிகள் அனைவரும் சம்மதித்திருப்பதாக மார்க்சிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version