பொழுதுபோக்கு
விஷாலுக்கு என்ன ஆச்சு? கைகள் நடுக்கத்துடன் பேசும் அதிர்ச்சி வீடியோ
விஷாலுக்கு என்ன ஆச்சு? கைகள் நடுக்கத்துடன் பேசும் அதிர்ச்சி வீடியோ
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மத கஜ ராஜா’ திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் நடித்துள்ளார். வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், சோனு சூட் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், இயக்குநர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, விஷால் மேடையில் பேசும் போது அவர்கள் கைகள் நடுங்கின. மைக் கூட அவரால் பிடிக்க முடியவில்லை. குரலும் நடுக்கத்துடனே இருந்தது. இதை அறிந்த நிகழ்ச்சி குழுவினர், சோஃபோ ஒன்றை அவர் அருகே போட்டனர். விஷால் இவ்வாறு நடுக்கத்துடன் பேசியது கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு என்ன ஆனது என பதறினர். இதையடுத்து, விஷால் முழுமையாக பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி “விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல். படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடனே வந்துள்ளார்” என்று தெரிவித்தார். வீடியோ: புதியதலைமுறைகைநடுக்கத்துடன் பேசிய நடிகர் விஷால்… விளக்கம் கொடுத்த தொகுப்பாளினி டிடி!#MadhaGajaRaja | #Vishal | #SundarC pic.twitter.com/F4hLy65qPJ