பொழுதுபோக்கு
Pongal 2025 Tamil Movie Releases: வணங்கான் முதல் கேம் சேஞ்சர் வரை: பொங்கல் பண்டிகைக்கு உங்கள் பேவரெட் எந்த படம்?
Pongal 2025 Tamil Movie Releases: வணங்கான் முதல் கேம் சேஞ்சர் வரை: பொங்கல் பண்டிகைக்கு உங்கள் பேவரெட் எந்த படம்?
Tamil Movies Release In January 2025: திரைத்துறையை பொருத்தவரை பண்டிகை தினங்கள் பெரிய ஜாக்பாட் என்று சொல்லலாம். மற்ற தினங்களில், சிறுபட்ஜெட் மற்றும் சிறிய நடிகர்களின் படங்கள் வெளியானாலும், பண்டிகை தினங்களில், அதுவும் தொடர் விடுமுறை வரும்போது முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி அந்த விடுமுறை நாட்களில் கலெக்ஷனை அதிகரிக்க நினைப்பார்கள். இதில் பொங்கல் விடுமுறை என்பது பல முன்னணி நடிகர்களின் முக்கிய டார்கெட்டாக இருக்கும். அந்த வகையில், 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு பல படங்கள் வெளியாகிறது. முதல்ல அஜித் நடிப்பில், விடா முயற்சி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், மற்ற படங்கள் தங்கள் வெளியிட்டை தள்ளி வைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த ரேஸில் இருந்து விடா முயற்சி விலகியதை தொடர்ந்து மற்ற படங்கள் தங்கள் வெளியீட்டை உறுதி செய்துள்ளன.வணங்கான்தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கும் பாலா இயக்கததில் தயாராகியுள்ள படம் வணங்கான். முதலில் சூர்யா நடிப்பில் தயாரான இந்த படம், ஒரு கட்டத்தில் சூர்யா விலகியதால் அருண் விஜய் நடிப்பில் தயாராகியுள்ளது. மேலும் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.கேம் சேஞ்சர்முன்னணி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள தெலுங்கு படம் கேம் சேஞ்சர். ராம்சரண் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். தெலுங்கில் தயாரானாலும் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த படம் ஜனவரி 10-ந் தேதி வெளியாக உள்ளது.மதகஜராஜாவிஷால் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு தயாரான மதகஜராஜா திரைப்படம், 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சுந்தர்சி இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் சந்தானம் நடித்துள்ள நிலையில், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது,காதலிக்க நேரமில்லைசமீபகாலமாக பெரிய வெற்றிப்படம் கொடுக்க முடியாமல் தவித்து வரும் ஜெயம் ரவி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்துள்ள படம் காதலிக்க நேரமில்லை. நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 14-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.நேசிப்பாயாவிஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், அதர்வா தம்பி ஆகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் நேசிப்பாயா. அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், சரத்குமார், பிரபு, குஷ்பு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜனவரி 14-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.மேலும் மலையாள நடிகர் ஷான் நிகாம் தமிழில் அறிமுகமாகும் மெட்ராஸ்காரன், கிஷன் தாஸ், ஸ்மிருதி நடித்துள்ள தருணம், ஆகிய படங்களும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக முன்னணி நடிகர்களின் ஓரிரு படங்கள் மட்டுமே வெளியாகி வந்த பொங்கல் தினத்தில், இந்த ஆண்டு, இவ்வளவு படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது.