விளையாட்டு

‘அவர்களை ரொம்ப ஈஸியா விமர்சிக்கிறாங்க; சாதனைகளை மறந்திடுறாங்க’: ரோகித், கோலிக்கு யுவராஜ் ஆதரவு

Published

on

‘அவர்களை ரொம்ப ஈஸியா விமர்சிக்கிறாங்க; சாதனைகளை மறந்திடுறாங்க’: ரோகித், கோலிக்கு யுவராஜ் ஆதரவு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த இந்தியா, 10 வருடங்களுக்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஆங்கிலத்தில் படிக்கவும்: People forget what Rohit Sharma, Virat Kohli have achieved, says Yuvraj Singhஇந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் தான் முக்கிய காரணம் எனப் பலரும் குற்றம்  சட்டி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக, முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித், விராட் கோலி மீது அடுக்கான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து இருவரும் எப்போது ஓய்வு பெறுவார்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். யுவராஜ் ஆதரவு இந்த நிலையில், முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் வீரரான யுவராஜ் சிங், இந்திய முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.  இது தொடர்பாக யுவராஜ் சிங் பேசுகையில், “நாம் நமது ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பற்றி பேசுகிறோம். நாம் அவர்களைப் பற்றி மிகவும் மோசமாகப் பேசுகிறோம். அவர்கள் கடந்த காலத்தில் சாதித்ததை மக்கள் மறந்து விடுகிறார்கள். அவர்கள் இந்த காலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள். சரி, அவர்கள் தோல்வியடைந்தார்கள். அவர்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடவில்லை. அவர்கள் நம்மை விட அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள், ”பயிற்சியாளராக கவுதம் கம்பீர், தேர்வாளராக அஜித் அகர்கர், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தற்போது கிரிக்கெட்டில் சிறந்த மூளைகளாக இருப்பதாக நான் உணர்கிறேன். மேலும் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன வழி என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.இது ஒரு பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன். கேப்டனின் ஃபார்ம் சரியில்லை என்று கடந்த காலங்களில் நான் பார்த்ததில்லை. ரோகி த் சர்மாவின் மகத்துவம் இதுதான், அவர் அணியை தன்னை விட முன்னால் வைத்திருந்தார். அவர் ஒரு சிறந்த கேப்டன் என்று நான் நினைக்கிறேன். வெற்றியோ தோல்வியோ எப்பொழுதும் சிறந்த கேப்டனாக இருப்பார். மேலும் அவரது கேப்டன்சியில் நாம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளோம். டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளோம். நாம் நிறைய சாதித்துள்ளோம்” என்று ”என்று யுவராஜ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், விராட் கோலி ஐந்து போட்டிகளிலும் விளையாடி 190 ரன்கள் எடுத்தார். அதேசமயம் ரோகித் தான் விளையாடிய மூன்று டெஸ்டில் ஐந்து இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. Yuvraj Singh backs Virat Kohli and Rohit Sharma and says we should look at their past achievements and back them to come good !! pic.twitter.com/Z15DNxovIn

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version