உலகம்
இஸ்ரேல் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்!
இஸ்ரேல் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்!
இஸ்ரேலுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒரு கட்டமாக 34 பணயக்கைதிகளை விடுவிக்கவுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகளை கைமாற்றும் உடன்படிக்கையின் ஒரு கட்டமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பிலான அறிவிப்பினை ஹமாஸ் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லையென அல் ஜஷீரா செய்தி வெளியிட்டுள்ளது.
பணயக்கைதிகளை விடுவிக்கும் ஆரம்பகட்டத்தில் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் நோயாளர்கள் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை விடுவிக்கப்படவுள்ள கைதிகளின் பெயர் விபரங்களை ஹமாஸ் இதுவரை வெளியிடவில்லையென இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.