சினிமா

“எங்களுக்கு இப்பவும் நல்ல உறவு இருக்கிறது” மீண்டும் மலருமா ஜிவி – சைந்தவி காதல்..!

Published

on

“எங்களுக்கு இப்பவும் நல்ல உறவு இருக்கிறது” மீண்டும் மலருமா ஜிவி – சைந்தவி காதல்..!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்திருந்தனர்.இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை உண்டு சமீபத்தில் கூட இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சேர்ந்து பாடி தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தனர்.இந்நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் குறித்து நேர்காணல் ஒன்றில் அவரின் முன்னாள் மனைவி சைந்தவி ஒரு விடயத்தினை பகிர்ந்துள்ளார்.அதில் “ஜி.வி சாரோட இசையில் நான் நிறைய பாட்டு பாடி இருக்கிறேன். அவர் என்னுடைய நல்ல நண்பரும் ஆவார். இப்பவும் எங்களுக்குள் நல்ல தொழில் ரீதியான உறவு இருக்கிறது. நாங்க சேர்ந்து வேலை செய்கிறோம். பாலா சாரோட “வணங்கான்” படத்துல கூட ஒரு பாட்டு பாடி இருக்கிறேன். அவருடைய இசை நிகழ்ச்சிகளிலும் நான் பாடுகிறேன். நாங்க எப்பவுமே நண்பர்களாக இருப்போம். அதை யாராலும் மாத்த முடியாது.” என கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version