சினிமா

அடுத்தடுத்து ரிலீஸ் தேதிகளை குறி வைத்த தனுஷ்.. வெளிவரும் 3 படங்களுக்கு பார்த்த நல்ல நாள்

Published

on

அடுத்தடுத்து ரிலீஸ் தேதிகளை குறி வைத்த தனுஷ்.. வெளிவரும் 3 படங்களுக்கு பார்த்த நல்ல நாள்

கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் நூறு கோடி வசூலைகொடுத்து சாதனை படைத்தது. இப்பொழுது தனுஷ் தனது நான்காவது படமான இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் மூன்று படங்கள் வெளிவர இருக்கிறது. அதில் இரண்டு படங்கள் அவருடைய டைரக்சனில் ரெடியாகி கொண்டிருக்கிறது. மற்றுமொரு படத்தில் நடித்து மட்டும் வருகிறார். இது அனைத்தும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது .

Advertisement

NEEK இந்த படத்தை இரண்டு வருடங்களாக தனுஷ் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதை முடித்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பார்த்து வருகிறார்கள். இந்த படத்தை பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடுகின்றனர்.

தனுஷ் இயக்கி வரும் அடுத்த படம் இது. தேனியில் பிரம்மாண்ட செட் போட்டு இதன் வேலைகளை பார்த்து வருகின்றனர். தனுஷின் உடல்நிலை பிரச்சனை காரணமாக இந்த படத்திற்கு இப்பொழுது பிரேக் கொடுத்துள்ளனர். இது ஏப்ரல் பத்தாம் தேதி சித்திரை 1 விடுமுறையை குறி வைக்கிறது

நாகர்ஜுன் உடன் தனுஷ் இணைந்து நடிக்கும் படம் குபேரா. இந்த படத்தில் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். படத்தில் வேலை செய்த மொத்த யூனிட்டும் இவர்கள் நடிப்பை பார்த்து மிரண்டு போய் உள்ளனர். இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார் தனுஷ். ஜூன் மாதம் 20ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version